ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான மற்று ஓர் வழக்கு விசாரணைக்கு
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேலும் ஒரு மனுவை எதிர்வரும் நொவெம்பர் மாதம் 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு நாடாளுமன்ற கலைக்கப்பட்ட சந்தரப்பத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளுக்கான நியமிக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தொடர்பில் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்த கருத்தின் வாயிலாக நீதிமன்ற அவமதிப்பு மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.