மதிய உணவுக்காக பயன்படுத்தப்படும் பொலித்தீனுக்கு முற்றாக தடை
அடுத்த ஆண்டுக்குள் மதிய உணவை சுற்றுவதற்கு பயன்படும் பொலித்தீன் முற்றிலும் தடை செய்யப்படும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் இதை தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமரவீர தெரிவித்தார்.
மேலும் அடுத்த ஆண்டுக்குள் இலங்கையில் பொலித்தீன் பாவனை முற்றாக தடை செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026