நீரோடை மகேஷ்-பிரியா திருமண நாள்

நீரோடை மகேஷ்-பிரியா திருமண நாள்

ஏழு ஆண்டுகளை நிறைவு செய்யும் உங்கள் நீரோடை மகேஷ் பிரியா திருமண நாள். மனையாளுக்காக எழுதிய வரிகள் இதோ ! – mahes priya wedding

சிரம் நீட்டி முடிச்சுகள் வாங்கி,
கரம் பிடித்து அக்னி சுற்றி,
வரம் என வந்த வசந்தமே!

நிந்தன் கைப்பற்றிய கணம்
எந்தன் கற்பனை நிழல் நிஜமானது!
நிலவுக்கு தங்கச்சி நீதானோ,
நிழலுக்கு என் கட்சி நீயோ.

உந்துதலில் இல்லாள்,
துணை நிற்பதில் அகமுடையாள்,
விருந்தோம்பலில் ஆயந்தி,
விரும்புதலில் வதுகை,
போர்க்குணத்தில் நாச்சி,
மனைவியாக கோமாகள் – mahes priya wedding.

கற்பனை கதாபாத்திரத்திற்கு
நிஜத்தில் குரல் தந்தாய்,
கரைந்த காணலுக்கு
தினம் பூச்செண்டு தந்தாய்,
நெகிளியாய் காற்றில் திரிந்த
பட்டத்திற்கு அங்கீகாரம்
தந்தாய்,
உளரல்களுக்கு உருவம் தந்தாய்,
உருவத்திற்கு கருவறை தந்தாய்,
எழுத்தில் பிரபஞ்சம் வெல்ல வல்லமை தந்தாய்,
அனைத்தும் தந்தவள்
வாழ்வெல்லாம் உன்பிம்பம்
பதிந்த பயணத்தை தந்தாய்.

கைப்பற்றி இல்லாள் இல்லம் புகுந்த நாளிது,
வாழ்க வளமுடன் ! வாழ்வோம் நலமுடனும்! வழமுடனும்!..
செல்லதுணைவிக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..

– நீரோடை மகேஷ்