கூகுள் மீட் இலவச சேவையில் திடீர் மாற்றம்
கூகுள் நிறுவனம் தனது மீட் வீடியோ காலிங் சேவையின் இலவச பதிப்புகளில் மீட்டிங்களுக்கான கால அளவு 60 நிமிடங்களாக குறைக்கப்படும் என அறிவித்து இருக்கிறது. மீட்டிங்களில் புதிய காலக்கெடு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலாகிறது.
ப்ரோமோ மாற்றங்கள் மற்றும் அட்வான்ஸ்டு அம்சங்கள் காலாவதியாவது பற்றி நாங்கள் எந்த கருத்தும் கூறவில்லை. இவற்றில் மாற்றம் ஏற்பட்டால், நிச்சயம் தகவல் வழங்குவோம் என கூகுள் நிறுவன செய்தி தொடர்பாளர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பதில் அளித்து இருக்கிறார்.
எக்ஸ்டென்ஷன் மூலம் கூகுள் அக்கவுண்ட் வைத்திருப்போர் அனைவரும் இலவச மீட்டிங்களை அதிகபட்சம் 100 பேருடன் எந்த கால அவகாசமும் இன்றி கலந்து கொள்ள முடியும். செப்டம்பர் 30 கால அவகாசம் ஜி சூட் மற்றும் ஜி சூட் பார் எட்யூகேஷன் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.
இரு சேவைகளிலும் மீட்டிங்கின் போது அதிகபட்சம் 250 பேர் கலந்து கொள்ளும் வசதி மற்றும் ஒற்றை டொமைனில் ஒரு லட்சம் பேருடன் நேரலை செய்யும் வசதி, மீட்டிங் ரெக்கார்டிங்களை கூகுள் டிரைவில் சேவ் செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.
வழக்கமாக இந்த அம்சங்கள் ஜி சூட் என்டர்பிரைஸ் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதற்கான மாத கட்டணம் 25 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1800 வசூலிக்கப்படுகிறது.