போலி WhatsApp செய்திகள் குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை

போலி WhatsApp செய்திகள் குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை

போலி WhatsApp இலக்கம் ஊடாக நிதி திரட்டும் மோசடி குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக எரிசக்தி அமைச்சின் ஊடகப் பிரிவு எச்சரித்துள்ளது.

எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடியின் புகைப்படத்தைப் பயன்படுத்தி, இந்த மோசடி இடம்பெறவுள்ளது.

டித்வா சூறாவளியினால் சேதமடைந்த பாடசாலைகளுக்கு நிதியுதவி வழங்குமாறு கோரி இந்த மோசடி செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.எரிசக்தி அமைச்சரினால் இவ்வாறான எந்தவொரு நிதி சேகரிப்போ அல்லது உதவி கோரிக்கையோ முன்வைக்கப்படவில்லை என அமைச்சு அறிவித்துள்ளது.

போலி WhatsApp செய்திகள் குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை | Don T Be Fooled By Fake Advertisements

இந்த மோசடி தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள் வாயிலாக வரும் இவ்வாறான போலித் தொலைபேசி அழைப்புகள் அல்லது செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என அமைச்சரின் ஊடகச் செயலாளர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.