தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ள மூன்று மாடி கட்டிடம்

தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ள மூன்று மாடி கட்டிடம்

கேகாலை-ஹெம்மாதகம நகரத்திற்கு மத்தியில் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ள மூன்று மாடி கட்டிடமொன்றின் காரணமாக தங்களது உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த கட்டிடத்திற்கு அருகே சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலை ஒன்றும் உள்ளதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறித்த கட்டிடம் தொடர்பில் கண்காணிப்பு விஜயமொன்றை நேற்றைய தினம் சபரகமுவ மாகாண பிரதி காவல்துறை செயலாளரும் பொறியியலாளருமான அஜித் பனாகொட ஆகியோர் நேரில் சென்று ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து அவர், பொறியியலாளர்களின் மேற்பார்வையின்றி கட்டப்பட்டுள்ளதன் காரணமாக இதில் உள்ள சுவர்களில் தற்போது வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கம்பிகள் தற்போது சேதமடைந்து காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, குறித்த கட்டிடம் தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.