அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு அதிபர் டிரம்ப் விதித்த தடை உத்தரவுக்கு நீதிபதி இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.
அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் அதிபர் டிரம்ப்பின் உத்தரவிற்கு அந்நாட்டு நீதிபதி இடைக்கால தடை விதித்து இருக்கிறார். புதிய உத்தரவு காரணமாக நவம்பர் மாதம் தேர்தல் முடிந்த பின் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.
டிக்டாக் சார்பாக வாதாடிய வழக்கறிஞர்களின் வாதத்தை ஏற்றுக் கொண்டு அமெரிக்க மாவட்ட நீதிபதி கார்ல் நிகோல்ஸ் அதிபர் டிரம்ப்பின் தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.
டிக்டாக் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் அதிபரின் தடை உத்தரவு முதல் சட்டத்திருத்த உரிமைகளை மீறுவதோடு வர்த்தகத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுவதாக கூறினர்.
முன்னதாக அமெரிக்காவில் சீனாவை பூர்வீகமாக கொண்டு இயங்கும் டிக்டாக் மற்றும் வீசாட் உள்ளிட்ட செயலிகள் அந்நாட்டு பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்ற காரணத்தை முன்வைத்து இவற்றை தடை செய்ய டிரம்ப் உத்தரவிட்டார்.