இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் பெண் உள்ளிட்ட இருவர் பலி

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் பெண் உள்ளிட்ட இருவர் பலி

கொழும்பு - புத்தளம் பிரதான வீதியில் மாரவில பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் பெண்னொருவர் உயிரிழந்தார்.

சாரதியின் கவனயீனம் காரணமாக முச்சக்கரவண்டிக்குள் இருந்த பெண் வீதியில் வீசப்பட்டமையினால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

விபத்தில் மாரவில பகுதியைச்சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, இரத்தினபுரி-எம்பிலிபிடிய பிரதான வீதியில் பிபிலேகம-குறுக்கு வீதியின் ஊடாக செல்லும் சந்தியில் பாரவூர்தியொன்று துவிச்சக்கரவண்டியில் பயணித்த நபர் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் திபொல்கெடிய பிரதேசத்தில் வசித்து வந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.