வில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் தமிழக பாரம்பரியம் சிறப்பானது- பிரதமர் மோடி

வில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் தமிழக பாரம்பரியம் சிறப்பானது- பிரதமர் மோடி

வில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் தமிழகத்தின் கலைப்  பாரம்பரியம் சிறப்பானது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழகத்தைச் சேர்ந்த வித்யா என்பவர் புராணங்களை கதையாக கூறிவருவதை அவர் வரவேற்றுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் அகில இந்திய வானொலியில் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுடன் உரையாடி வருகிறார். அந்தவகையில் 69ஆவது முறையாக இந்த நிகழ்ச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, பிரதமர் பேசுகையில், “தமிழகத்தின் வில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் பாரம்பரியம் சிறப்பானது.

தமிழகத்தைச் சேர்ந்த வித்யா என்பவர் புராணங்களை கதையாக கூறுவதை செய்து வருவருகிறார். கதை சொல்வது ஒரு அற்புதமான கலையாகும்.

பஞ்சதந்திரக் கதைகள் போன்றவை இந்தியாவின் சிறப்பான பாரம்பரியத்தை உணர்த்துகின்றன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.