கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது
பாரவூர்தி ஒன்றில் கொண்டுச் செல்லப்பட்ட 5,230 கிலோகிராம் கழிவுத் தேயிலையுடன் பாரவூர்தியின் சாரதியை ரத்கம விசேட காவல்துறை அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
எல்பிடிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட வத்தஹேன பிரதேசத்தில் வைத்தே குறித்த பாரவூர்தி இன்று (27) காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் இவ்வாறு மடக்கிப் பிடிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த கழிவுத் தேயிலைகள் அம்பலாங்கொடை ரன்தொபே பிரதேசத்திற்கு கொண்டுச் சென்றுக்கொண்டிருந்தாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக கழிவுத் தேயிலையுடன் குறித்த பாரவூர்தி சாரதி எல்பிடிய காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.