1,024 கிலோ மஞ்சள் தொகை மீட்பு
மன்னார் - பேசாலை - பெரிய கரிசல் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள சுமார் ஆயிரத்து 24 கிலோ கிராம் மஞ்சள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த மஞ்சள் தொகை இன்று பிற்பகல் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மஞ்சள் தொகை பாரவூர்தியில் கொண்டு செல்லப்படவிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் பாரவூர்தியின் சாரதி தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026