ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கிய விஜயகலா மகேஸ்வரன்..!
அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் முன்னிலையாகி சுமார் 4 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்
நேற்று முற்பகல் 10.20 அளவில் அவர் அங்கு முன்னிலையானதுடன் பிற்பகல் 2.30க்கு அங்கிருந்து வெளியானதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.
அவர் இதற்கு முன்னர் கடந்த 17 ஆம் திகதி அங்கு முன்னிலையாகியிருந்தார்.
அன்றைய தினம் சாட்சிப் பதிவை மேற்கொள்ள போதிய கால அவகாசம் இருக்கவில்லை என்பதன் காரணமாக நேற்றைய தினம் மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, அவர் குறித்த ஆணைக்குழுவில் இன்றைய தினம் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.