பெரிய வெங்காய இறக்குமதி தொடர்பில் அமைச்சர் பந்துல வெளியிட்டுள்ள அறிவிப்பு!

பெரிய வெங்காய இறக்குமதி தொடர்பில் அமைச்சர் பந்துல வெளியிட்டுள்ள அறிவிப்பு!

பெரிய வெங்காயத்தை மீண்டும் இறக்குமதி செய்வது குறித்து இந்திய அரசுடன் கலந்துரையாடப்படுமென வர்த்த அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இந்தியாவில் இருந்து தற்போது எந்தவொரு நாட்டிற்கும் பெரிய வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கும், பெரிய வெங்காயத்தை நுகர்வோருக்கு எந்தவிதமான பற்றாக்குறையும் இன்றி வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.