தடைசெய்யப்பட்ட துப்பாக்கியுடன் பொலிஸாரிடம் சிக்கிய குடும்பஸ்தர்

தடைசெய்யப்பட்ட துப்பாக்கியுடன் பொலிஸாரிடம் சிக்கிய குடும்பஸ்தர்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வாகனேரி - குளத்துமடு பகுதியில் கட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தள்ளனர். 37 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட கட்டுத் துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தும் ஈயக் குண்டுகள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரையும் வாழைச்சேனை பொலிஸாரிடம் விசேட அதிரடிப் படையினர் ஒப்படைத்துள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பல்வேறு சட்டவிரோத செயல்கள் இடம்பெற்று வரும் நிலையில், அதனை தடுக்கும் வகையில் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.