வீடியோ கால் செயலியான ஜூம் விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் வசதியை தனது ஆண்ட்ராய்டு பதிப்பில் வழங்கி வருகிறது.
ஜூம் ஆண்ட்ராய்டு செயலியில் புது அப்டேட் வெளியிடப்படுகிறது. இணைய வழி சேவையில் அதிக கவனம் செலுத்தி வந்த ஜூம், தற்சமயம் மொபைல் செயலியிலும் மாற்றங்களை செய்ய துவங்கி உள்ளது.
அந்த வரிசையில் ஜூம் ஆண்ட்ராய்டு செயலியில் விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் அம்சம் வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் ஜூம் ஆண்ட்ராய்டு செயலி வெர்ஷன் 5.3 இல் வழங்கப்படுகிறது. புதிய அம்சம் தவிர இந்த அப்டேட் சில பிழை திருத்தங்களை மேற்கொண்டு இருக்கிறது.
இத்துடன் அழைப்புகளின் போது, வீடியோக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் அம்சம் இணைய வழி பயனர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருக்கிறது. வீட்டில் இருந்து பணியாற்றுவோர், அழைப்புகளின் போது, தனக்கு பின் இருக்கும் இடத்தை மாற்றிக் கொள்ள இந்த அம்சம் உதவுகிறது.
இணைய பதிப்பை தொடர்ந்து இந்த அம்சம் ஆண்ட்ராய்டு செயலியிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. தற்சமயம் ஆண்ட்ராய்டு செயலியில் பேக்கிரவுண்ட்களை மாற்ற படங்களை தேர்வு செய்ய முடியும். வீடியோக்களை பேக்கிரவுண்டாக செட் செய்து கொள்ளும் வசதி இணைய பதிப்பில் வழங்கப்பட்டு உள்ளது.