மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு-பிரதமர்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைகாணொளி மூலம் இன்று இடம்பெறும் சந்திப்பில், மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக, மீனவர் சங்கத்துடன் நடத்திய சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில், இன்று தொலைகாணொளி மூலம் உச்சிமாநாடு இடம்பெறவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கியத்துவம் மிக்க பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.