எஸ்.பி.பி. மறைவுக்கு மாநில முதல்வர்கள் இரங்கல்

எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவுக்கு மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நலம் தேறி வந்த நிலையில், நேற்று அவரது உடல்நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டது. இன்று மதியம் காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

இந்நிலையில் கேரள மாநில முதல்வர் பிணராயி விஜய், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் பட்நாயக், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட பெரும்பாலான மாநில முதல்வர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.