எஸ்பிபி கானக்குரல் பாடல்கள் என்றுமே ஒலித்துக்கொண்டே இருக்கும்- ஓ.பன்னீர் செல்வம்

எஸ்பி பாலசுப்ரமணியம் மறைந்தாலும் அவரது கானக்குரல் பாடல்கள் என்றுமே மறையாது ஒலித்துக் கொண்டே இருக்கும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 51 நாட்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று மதியம் காலமானார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எஸ்பிபி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:-

திரையிசை உலகில் தனக்கென தனி இடம் பெற்ற திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவு சொல்லொணாத் துயரத்தை அளிக்கிறது. S.P.பாலசுப்ரமணியம் அவர்கள் மறைந்தாலும் அவரது கானக்குரல் பாடல்கள் என்றுமே மறையாது ஒலித்துக் கொண்டே இருக்கும். அவரது பெருமைகளை நினைவூட்டிக் கொண்டே இருக்கும் என கூறியுள்ளார்