மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கு பிரதமர் தலைமையில் விசேட கூட்டம்!
ஸ்ரீலங்காவின் வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்த பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையிலான விசேட கலந்துரையாடல் இன்று மாலை 4 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.
நீண்ட காலமாக ஸ்ரீலங்கா மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பான பிரச்சினைகள் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இதற்கான ஒரு தீர்வுக்கு வரும் பொருட்டு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது வடக்கு மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும். அத்துடன் அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவது தொடர்பிலும் கலவனம் செலுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.