வழமைக்கு திரும்பி வரும் இலங்கையின் கறுவா ஏற்றுமதி
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிப்படைந்திருந்த இலங்கை கறுவா ஏற்றுமதி தற்போது வழமைக்கு திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.
இதற்கு அமைய பிரேசிலுக்கு கறுவாவினை ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்கள் வெளிவிவகாரத்துறை அமைச்சின் கீழ் வரும் “தேசிய பயிர் செய்கை தனிமைப்படுத்தல் சேவையினால்” வழங்கப்படும் சான்றிதழிற்கு அமைய கறுவாவினை ஏற்றுமதி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழுடன் இலகுவாக கறுவாவினை ஏற்றுமதி செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரேசிலில் உள்ள இலங்கை தூதுவராலயம் விவசாய திணைக்களத்துடன் இணைந்து, பிரேசில் உணவு விநியோக நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பிரேசில் சந்தையில் இலங்கையின் கறுவா ஏற்றுமதி அதிக அளவில் மேம்படுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.