தமிழ் திரைப்பட பாடலாசிரியர் உடுமலை நாராயணகவி பிறந்த தினம்: 25-9-1899

தமிழ் திரைப்பட பாடலாசிரியர் உடுமலை நாராயணகவி பிறந்த தினம்: 25-9-1899

1899-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ம் நாள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள பூவிளைவாடி என்னும் பூளைவாடிச் சிற்றூரில் 24 மனைத் தெலுங்கு செட்டியார் இனத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி-முத்தம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் உடுமலை நாராயணகவி. இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் நாராயணசாமி என்பதாகும். இளம் வயதிலேயே தம் தாய், தந்தையரை இழந்த நாராயணசாமி வறுமையில் வாடினார்.

 

 

1899-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ம் நாள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள பூவிளைவாடி என்னும் பூளைவாடிச் சிற்றூரில் 24 மனைத் தெலுங்கு செட்டியார் இனத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி-முத்தம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் உடுமலை நாராயணகவி. இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் நாராயணசாமி என்பதாகும்.

இளம் வயதிலேயே தம் தாய், தந்தையரை இழந்த நாராயணசாமி வறுமையில் வாடினார். தனது சகோதரர் தனுஷ்கோடியின் ஆதரவில் வாழ்ந்தார். நான்காம் வகுப்போடு தனது பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்ட நாராயணசாமி, கிராமியக் கலைகளான புரவியாட்டம், சிக்குமேளம், தப்பாட்டம், உடுக்கடிப்பாட்டு, ஒயில்கும்மி போன்ற கொங்கு மண்ணின் கலைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு ஆர்வத்துடன் பங்கேற்றார்.

 


விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர்; முத்துசாமிக்கவிராயரின் மாணவர்; ஆரம்பக் காலத்தில் நாடகங்களுக்கு பாடல் எழுதினார். இவருடைய பாட்டுகள் நாட்டுப்புற இயலின் எளிமையையும், தமிழ் இலக்கியச் செழுமையையும் கொண்டிருந்தன.

1933-ல் திரைப்படங்களுக்கு பாடல் எழுத ஆரம்பித்தவர். நாராயணகவி என்று பெயர் சூட்டிக்கொண்டு கவிஞர் இனமென்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர்.

ஆரம்பத்தில் ஆன்மீகப் பாடல்களை எழுதிய நாராயணகவி, மகாகவி பாரதியாரின் நட்புக்குப்பின் பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதி அதன் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியவர். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு `கிந்தனார்’ கதாகாலட்சேபம் எழுதியதால் கலைவாணரின் குருவாக விளங்கியவர்.

அண்ணாத்துரை எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி போன்ற படங்களுக்கும் மு. கருணாநிதி கதை வசனம் எழுதிய பராசக்தி, மனோகரா திரைப்படங்களுக்கும், பிரபாவதி, காவேரி, சொர்க்கவாசல், தூக்குத்தூக்கி, தெய்வப்பிறவி, மாங்கல்யபாக்கியம், சித்தி, எங்கள் வீட்டு மகாலட்சுமி, ரத்தக் கண்ணீர், ஆதிபராசக்தி, தேவதாஸ் போன்ற படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர்.

ஏறத்தாழ பத்தாயிரம் பாடல்களை எழுதியுள்ள நாராயணகவி இயல்பாகவே இனிமையான சுபாவம் கொண்டவர். நேர்மையும், சொல்திறமையும் மிக்கவர். எவ்வகையிலும் தலை வணங்காத உறுதி உடையவர். பிறருக்கு உதவுகின்ற மனம் படைத்தவர். திரையுலகில் தமக்கென ஒரு மதிப்பையும் புகழையும் வைத்திருந்தவர்.