தொடர் செல்ல செல்ல எம்.எஸ். டோனி விஸ்வரூபம் எடுப்பார்: ஸ்டீபன் பிளமிங்

தொடர் செல்ல செல்ல எம்.எஸ். டோனி விஸ்வரூபம் எடுப்பார்: ஸ்டீபன் பிளமிங்

ஐபிஎல் தொடர் செல்ல செல்ல எம்எஸ் டோனி விஸ்வரூபம் எடுப்பார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2020 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. முதல் போட்டியில் வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் தோல்வியடைந்தது. இரண்டு போட்டிகளிலும் எம்எஸ் டோனி பின்கள வரிசையில்தான் களம் இறங்கினார்.

அவர் முன்னதாகவே களம் இறங்க வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர. ஆனால் கூடுதலான தனிமைப்படுத்துதல், நீண்ட காலமாக போட்டி கிரிக்கெட் விளையாடாமல் இருந்ததுதான் காரணம் என எம்எஸ் டோனி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஐபிஎல் தொடர் செல்ல செல்ல எம்எஸ் டோனி விஸ்வரூபம் எடுப்பார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீவன் பிளமிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டீபன் பிளமிங் கூறுகையில் ‘‘நாங்கள் இந்த கேள்வியை வருடந்தோறும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். அவர் 14-வது ஓவரில் களம் இறங்கினால், பேட்டிங்கை பொறுத்த வரைக்கும் அது உகந்த நேரமாக இருக்கும். அவர் அதிக மாதங்கள் கிரிக்கெட் விளையாடாமல், அணிக்கு திரும்பியுள்ளார்.

இன்னும் அதிகமான தூரம் இல்லை. ஆகவே, அவருடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதை நீங்கள் பார்க்க இன்னும் கொஞ்சம் நேரம் தேவை. ஆனால், தொடர் முடிவதற்குள் சிறப்பாக விளையாடுவார். டு பிளிஸ்சிஸ் இந்த ஃபார்மை அப்படியே தொடர்ந்தால், நாங்கள் தொலைவில் இருப்பதாக நினைக்கவில்லை, பேட்டிங்கை விட இதுதான் கவலை அளிக்கிறது’’ என்றார்.