இடியுடன் கூடிய கனமழை...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

இடியுடன் கூடிய கனமழை...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

இலங்கையின் இன்றைய வானிலை நிலவரம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (08) அதிகாலை 05.30 மணிக்கு முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முன்னறிவிப்பின்படி, தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இதனைத் தவிர, நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், நாட்டின் பல பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய கனமழை...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை | Sri Lanka Weather Update Mist Alert Rain March 8அதற்கமைய வடக்கு, வடமத்திய, மத்திய, சபரகமுவ, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

இத்தகைய பனிமூட்டமான காலப்பகுதிகளில் வீதிப் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனச் சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.