யாழில் உள்ள வறிய குடும்பத்திற்கு புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

யாழில் உள்ள வறிய குடும்பத்திற்கு புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ‘வீடு நிர்மாணிக்கும் திட்டத்தின்’ ஒரு கட்டமாக யாழ். பாதுகாப்பு படைத் தளபதி அண்மையில் யாழ். கரனாவையில் உள்ள வறிய குடும்பத்திற்கான வீட்டினை நிர்மாணிப்பதற்காக அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.

யாழ். பாதுகாப்பு படைத் தளபதியின் வேண்டுகோளிற்கு அமைய, தென் பகுதியைச் சேர்ந்த ஒருவர் குறித்த வீட்டின் நிர்மாணப் பணிக்கான மூலப்பொருட்களை வழங்க முன்வந்துள்ளார்.

இவ் வீட்டின் நிர்மாணப் பணிக்கான ஆளனி, தொழல்நுட்பம் மற்றும் பொறியியல் நிபுணர்களை 551 ஆவது பிரிகேட் படைத் தளபதியின் மேற்பார்வையின் கீழ் 4 ஆவது இலங்கை சிங்க படையணியின் படையினர் வழங்கியுள்ளனர்.

55 ஆவது பாதுகாப்பு படைப்பிரிவின் படைத் தளபதி 551 மற்றும் 553 ஆவது பிரிகேட் படைத் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர் இந்நிர்மாணப் பணியின் ஆரம்ப நிகழ்வில் சமூக இடைவெளியினை கடைப்பிடித்து கலந்து கொண்டனர்.