ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ் வெளியீட்டு விவரம்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரிஸ் வெளியீட்டு தேதி மற்றும் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் அக்டோபர் 13 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புதிய ஐபோன்களின் முன்பதிவு அக்டோபர் 16 ஆம் தேதி துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

புதிய ஐபோன்களின் வெளியீடு பற்றி ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், ஏற்கனவே வெளியான தகவல்களிலும் புதிய ஐபோன் 12 சீரிஸ் அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டு இருந்தது.

இதுவரை வெளியாகி உள்ள தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் 5.4 இன்ச் ஐபோன் 12 மினி, 6.1 இன்ச் ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்ட மாடல்களை அறிமுகம் செய்யும் என கூறப்பட்டுள்ளது. இதில் ப்ரோ மாடல்களில் ஆப்பிள் LiDAR சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

 

ஐபோன் 12 சீரிஸ் மாடல்களின் துவக்க விலை 750 டாலர்கள் வரை இருக்கும் என தெரிகிறது. முந்தைய ஐபோன் 11 மாடல் விலை 699 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. புதிய ஐபோன்களில் OLED டிஸ்ப்ளே, ஏ14 பயோனிக் சிப், குவால்காம் 5ஜி மோடெம் மற்றும் ஆன்டெனா உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.