பொதுஜன முன்னணி வேட்பாளர் தாக்குதல் சம்பவம்- விசாரணைகளை ஆரம்பித்துள்ள காவல்துறை
மிஹிந்தலை பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி உறுப்பினர் ஒருவரை தாக்கி காயப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட அப்பிரதேச சபையின் தலைவர் மற்றும் பிரதி தலைவர் உள்ளிட்ட 7 உறுப்பினர்களை எதிர்வரும் 7ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் காயமடைந்த பிரதேச சபை உறுப்பினரின் முறைப்பாட்டைத் தொடர்ந்தே காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.