இவ்வருடம் நிறைவடையும் வரை எரிபொருள் விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படாதென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் நிறைவடையும் வரை எரிபொருள் விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படாதென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தங்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
விலையில் மாற்றம் மேற்கொள்ளாது நிலையான மட்டத்தில் முன்னெடுத்துச்செல்ல எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வருட இறுதியில் உலக வர்த்தக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக கணிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் சர்வதேசத்தில் எரிபொருள் விலை அதிகரித்தாலும், நாட்டில் எரிபொருளுக்கான விலையில் அதிகரிப்பு ஏற்படாதென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.