அரிசியை அதிக விலைக்கு விற்கும் வர்த்தகர்களை பிடிக்க களத்தில் இறங்கும் அதிகாரிகள்

அரிசியை அதிக விலைக்கு விற்கும் வர்த்தகர்களை பிடிக்க களத்தில் இறங்கும் அதிகாரிகள்

அரிசியை அதிக விலைக்கு விற்கும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் இன்று (24) முதல் தொடங்கப்படும் என்று நுகர்வோர் விவகார ஆணையம் தெரிவித்துள்ளது.

சில வர்த்தகர்கள் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்கிறார்கள் என்ற தகவலின் அடிப்படையில் நுகர்வோர் விவகார ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது.

சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி வகை அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக விற்கப்படுவதாக அதிக முறைப்பாடுகளை ஆணையம் பெற்றுள்ளது.

நுகர்வோர் விவகார ஆணையம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பின்படி, ஒரு கிலோ அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 93 ரூபாயும், ஒரு கிலோ நாடு அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 96 ரூபாயும் ஆகும்.

கடந்த மாதமும் சில வர்த்தகர்கள் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தனர். அந்த நேரத்தில், போதுமான அரிசி இருப்பு இல்லை என்று வணிகர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும், அதிகபட்ச விலைகள் நிர்ணயிக்கப்பட்ட பின்னர் இதுவரை அரிசி இறக்குமதி செய்யப்படவில்லை என்ற போதிலும் சந்தையில் அரிசி பற்றாக்குறை ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.