
கட்டுநாயக்க பகுதியில் கைவரிசையை காட்டிவந்த நபர் காவல்துறை வலையில் சிக்கினார்
கட்டுநாயக்க பிரசேத்தில் உள்ள விற்பனை நிலையமொன்றில் இருந்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கட்டுநாயக்க-எவரிவத்த பிரதேசத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையத்தில் பணத்தை கொள்ளையடித்துவிட்டு, பின்னர் விற்பனை நிலையத்திற்கு தீ வைத்து சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரையில் நஷ்டத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக குறித்த சந்தேக நபர் நேற்று (21) கைது செய்யப்பட்டார்.
சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் 27 வயதுடைய கல்கமுவ பிரதேசத்தில் வசித்து வருபவர் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் கடந்த மாதம் 16 மற்றும் 17ஆம் திகதிகளில் கட்டுநாயக்க பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கியொன்றில் இருந்து 6 ஆயிரம் ரூபாவும் ஆடை விற்பனை நிலையமொன்றில் இருந்து 80 ஆயிரம் ரூபாவும் கொள்ளையடித்துள்ள விடயம் தெரியவந்துள்ளது.