முச்சக்கர வண்டிக்குள் சடலமாக கிடந்த இளைஞன் ; விசாரணைகள் தீவிரம்

முச்சக்கர வண்டிக்குள் சடலமாக கிடந்த இளைஞன் ; விசாரணைகள் தீவிரம்

மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி வீதியில், கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டி ஒன்றிற்குள் இருந்து நபர் ஒருவரின் சடலம் நேற்று (03) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கர வண்டி ஒன்றினுள் சடலம் ஒன்று காணப்படுவதாக மொரட்டுவை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

முச்சக்கர வண்டிக்குள் சடலமாக கிடந்த இளைஞன் ; விசாரணைகள் தீவிரம் | Young Man Found Dead Inside Three Wheeler

விசாரணைகளின் போது, உயிரிழந்தவர் மொரட்டுவை, வில்லோரவத்தை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும், இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக மொரட்டுவை பொலிஸார் விசேட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.