இணையத்தில் லீக் ஆன ஐபோன் 12 விவரங்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரிஸ் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 சீரிஸ் மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஐபோன் 12 சீரிஸ் குவால்காம் 5ஜி மோடெம் மற்றும் ஆன்டெனாக்களை கொண்டிருக்கும் என இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், புதிய ஐபோன் 12 விலை விவரங்கள் இணையத்தில் வெளஇயாகி இருக்கின்றன. தற்சமயம் சீனாவில் இருந்து வெளியான தகவல்களின் படி புதிய ஐபோன்கள் விலை முந்தைய ஐபோன் 11 சீரிஸ் அறிமுக விலையை விட 50 டாலர்கள் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

ஐபோன் 12 சீரிஸ் மாடல்களின் துவக்க விலை 750 டாலர்கள் வரை இருக்கும் என தெரிகிறது. முந்தைய ஐபோன் 11 மாடல் விலை 699 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. புதிய ஐபோன்களில் OLED டிஸ்ப்ளே, ஏ14 பயோனிக் சிப், குவால்காம் 5ஜி மோடெம் மற்றும் ஆன்டெனா உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

முந்தைய தகவல்களின் படிஆப்பிள் புதிய ஐபோன்களுடன் சார்டர்கள் மற்றும் இயர்பாட்ஸ் உள்ளிட்டவற்றை வழங்காது என கூறப்படுகிறது.