கடும் எதிர்ப்பையும் மீறி விமானப்படையினரின் போர்ப் பயிற்சி!

கடும் எதிர்ப்பையும் மீறி விமானப்படையினரின் போர்ப் பயிற்சி!

ரஷ்யாவின் கடும் எதிர்ப்பையும் மீறி உக்ரைனில் இங்கிலாந்து விமானப்படையினர் போர் பயிற்சியில் ஈடுபட்டனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்வாறு உக்ரைனுடன் போர் பயிற்சி நடத்துவதாக இங்கிலாந்து அறிவித்ததையடுத்து ரஷ்யா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது எனவும் செய்தி வெளியாகியுள்ளது.

எனினும் அதையும் மீறி இங்கிலாந்து விமானப்படையைச் சேர்ந்த 250 பரசூட் வீரர்கள் வானிலிருந்து குதித்து பயிற்சியில் ஈடுபட்டனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு கிரீமியா, ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட பின்னர் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பகைமை நீடித்து வருகிறது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே உக்ரைனில் இங்கிலாந்து விமானப்படையினர் சி 130 ஹெர்குலஸ் விமானத்தில் பறந்து சுமார் 600 அடி உயரத்தில் இருந்து குதித்து பயிற்சி மேற்கொண்டனர்.