கண்டி நில அதிர்வு விவகாரம்- ஆராய்வு நடவடிக்கைகளில் இணையவுள்ள இரண்டு பல்ககைலக்கழகங்கள்

கண்டி நில அதிர்வு விவகாரம்- ஆராய்வு நடவடிக்கைகளில் இணையவுள்ள இரண்டு பல்ககைலக்கழகங்கள்

கண்டியில் - திகன உள்ளிட்ட பல இடங்களில் அண்மையில் ஏற்பட்டிருந்த நில அதிர்வு தொடர்பிலான மேலதிக ஆராய்வு நடவடிக்கைகளுக்காக மொரட்டுவ மற்றும் பேராதெணிய பல்கலைக்கழகங்களையும் இணைத்துக் கொள்வதற்கு புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, குறித்த பல்கலைக்கழகங்களையும் இணைத்துக்கொண்டமை தொடர்பில் பணிப்பாளர் சபைக்கு அனுமதிக் கடிதமொன்றை முன்வைப்பதற்கு எதிர்பார்ப்பதாக அதன் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அடுத்த வாரம் மொரட்டுவா மற்றும் பெரதெனியா பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அறிவிக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

அதன்படி, கண்டி-பல்லேகேல் பகுதியில் நிலநடுக்கம் தொடர்பிலான தொழில்நுட்ப விடயங்களை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களால் நேரடியாகக் கையாளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்