போக்குவரத்து தரப்பினர் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள யோசனை
சாதாரண கட்டண அறவீட்டுடன் முன்னெடுக்கப்படும் பேருந்து சேவைகளுக்கும், அரை சொகுசு பேருந்துகளில் அறவிடப்படும் பயணக் கட்டணத்தை அறவிடுவதற்கு வாய்ப்பு வழங்குமாறு போக்குவரத்து தரப்பினர் அரசாங்கத்திடம் யோசனை முன்வைத்துள்ளனர். இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன மற்றும் அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன ப்ரியஞ்சித் ஆகியொர் இந்த யோசனையை முன்வைத்துள்ளனர்.
நாடு முழுவதும், சாதாரண கட்டண அறவீட்டுடன் இயங்கும் பேருந்துகள், ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு முன்னர் பெற்ற வருமானத்தில் 50 வீத வறுமானம் குறைவடைந்துள்ளதாக போக்குவரத்து துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே, ஆசன எண்ணிக்கைக்கு அமைய, பயணிகளை ஏற்றிச் செல்லும் அரை சொகுசு பேருந்துகளில் அறவிடப்படும் கட்டணத்தை, சாதாரண கட்டணத்தை அறிவிடும் பேருந்துகளுக்கு அறவிடுவதற்கு வாய்ப்பளிக்குமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.