தமிழர் பகுதியில் அரச அதிகாரியின் உயிரை பறித்த சம்பவம் ; துயரில் கதறும் குடும்பம்

தமிழர் பகுதியில் அரச அதிகாரியின் உயிரை பறித்த சம்பவம் ; துயரில் கதறும் குடும்பம்

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேச சபையின் வருமான வரி பரிசோதகராக கடமையாற்றிவந்த நபர் ஒருவர் பாம்புக்கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

துணுக்காய் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 55 வயதுடையவரே இவ்வாறு பாம்புக்கடிக்கு இலக்காகி உயிரிழந்தவராவார்.

தமிழர் பகுதியில் அரச அதிகாரியின் உயிரை பறித்த சம்பவம் ; துயரில் கதறும் குடும்பம் | Govt Officer Died In Tamil Areaநேற்று துணுக்காய் பகுதியில் வயலில் வேலை செ‌ய்துகொண்டிருந்த போதே இவ்வாறு பாம்புக்கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இவர் முன்னாள் துணுக்காய் பிரதேச சபையின் வருமான வ‌ரி பரிசோதகரும் தற்போது மாந்தை கிழக்கு பிரதேச சபையின் வருமான வரி பரிசோதகராக கடமையாற்றிவந்துள்ளார்.

இவரது உடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ள அதேவேளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.