உலகையே உலுக்கும் எரிபொருள் விலை உயர்வு ; 85 நாடுகள் பாதிப்பு

உலகையே உலுக்கும் எரிபொருள் விலை உயர்வு ; 85 நாடுகள் பாதிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற நிலையைத் தொடர்ந்து, உலகளவில் எரிபொருள் விலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடியாக உயர்ந்துள்ளன.

போர் தொடங்கிய குறுகிய காலத்திற்குள் குறைந்தது 85 நாடுகள் பெட்ரோல் விலை உயர்வைப் பதிவு செய்துள்ளன.

சர்வதேச எரிபொருள் விலை விபரங்களின்படி (Global Petrol Prices), ஆசிய நாடுகள் இந்த விலை உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

உலகிலேயே மிக அதிகப்படியான உயர்வாக 50 சதவீத விலை உயர்வைப் பதிவு செய்துள்ளது. இங்கு ஒரு லீட்டர் பெட்ரோல் $0.75 இலிருந்து $1.13 ஆக உயர்ந்துள்ளது.

உலகையே உலுக்கும் எரிபொருள் விலை உயர்வு ; 85 நாடுகள் பாதிப்பு | Fuel Price Hike Shakes World 85 Countries Affectedஅத்துடன் லாஓஸில் 33 சதவீதமும், கம்போடியாவில் 19 சதவீதமும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சுமார் 17 சதவீத விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

மேலும் அவுஸ்திரேலியாவில் 18 சதவீத விலை உயர்வைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) போர் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வழியாகவே பெரும்பாலான எண்ணெய் கப்பல்கள் பயணிக்கின்றன.

இதனால் எண்ணெய் இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் ஜப்பான், தென்கொரியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் கடும் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளன.

நிலைமையைக் கட்டுப்படுத்த இந்த நாட்டு அரசாங்கங்கள் ஏற்கனவே அவசரகால நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.