பிரீமியம் விலையில் சோனி வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம்

சோனி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் ஹெட்போன் பிரீமியம் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

சோனி நிறுவனம் இந்திய சந்தையில் நான்காம் தலைமுறை WH-1000XM4 வயர்லெஸ் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இது WH-1000XM3 மாடலில் வழங்கப்பட்ட தொழில்நுட்பங்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

 

மேலும் இதில் ஆன்-இயர் டிடெக்ஷன், பல்வேறு சாதனங்களுடன் இணையும் வசதி, அடாப்டிவ் சவுண்ட் கண்ட்ரோல், சிறப்பான நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் இதர வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன. டூயல் நாய்ஸ் சென்சார் மூலம் மேம்பட்ட நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படுகிறது.

இதன் ஆடியோ தரத்தை மேம்படுத்த புதிய எட்ஜ்-ஏஐ சார்ந்த டிஎஸ்இஇ எக்ஸ்ட்ரீம் வசதி மற்றும் 360 ரியாலிட்டி ஆடியோ வசதி வழங்கப்பட்டு உள்ளது.

 

சோனி WH-1000XM4 அம்சங்கள்

 

- டிஜிட்டல் நாய்ஸ் கேன்சலிங் வசதி

- வாய்ஸ் அசிஸ்டண்ட்- அலெக்சா, கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி

- சீரான ஆடியோ அனுபவம் வழங்க அதிநவீன தொழில்நுட்பம்

- பிராக்சிமிட்டி சென்சார், 2 அக்செல்லரேஷன் சென்சார்கள் 

- குவிக் அட்டென்ஷன் மோட்

- ஸ்மார்ட் லிசெனிங் வசதி

- நீண்ட நேர பேட்டரி பேக்கப்

 

சோனி WH-1000XM4 ஹெட்போன் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 29,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அமேசான், சோனி சென்டர் மற்றும் சோனி பிரத்யேக ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது.