கிழக்கில் சட்டவிரோத நடவடிக்கைக்கு தயார் நிலையிலிருந்த சந்தேக நபர்!
திருகோணமலை தம்பலகமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கோவிலடி பிரதேசத்தில் இன்று காலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகத்திற்கு உரிய முச்சக்கரவண்டியை சோதனை மேற்கொண்டதில் முச்சக்கரவண்டியில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட 497 டெட்டனேட்டர் குச்சிகளை கைப்பற்றியதாக தம்பலகமம் பொலிஸார் தெரிவித்தனர்.
குருநாகல் பிரதேசத்தில் இருந்து கிண்ணியா பிரதேச மீனவர்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்கு கொண்டு செல்லப்பட்ட டெட்டனேட்டர் குச்சுகளே கைப்பற்றப்பட்டதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர். டெட்டனேட்டர் குச்சுகளை சட்டவிரோதமாக ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு கடத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கிண்ணியா பிரதேசத்தில் வசிக்கும் 54 வயதுடையர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட டெட்டனேட்டர் குச்சுகளின் சந்தைப்பெறுமதி சுமார் 50000 ரூபா எனவும் 100000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவிருந்ததாக சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட டெட்டனேட்டர் குச்சுகளையும் திருகோணமலை நீதிமன்றத்தில் பாரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.