அதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை....!

அதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை....!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 17 பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வைரஸ் தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 60ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், இலங்கையில் இதுவரையில் மூவாயிரத்து 276 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் இன்னும் 203 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அத்துடன், 44 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளதுடன், வைரஸ் தொற்றினால் இலங்கையில் இதுவரை 13 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.