குறைந்து வரும் வாகன பதிவுகள்..!

குறைந்து வரும் வாகன பதிவுகள்..!

கடந்த ஆகஸ்ட் மாதம் வாகன பதிவுகள் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன பதிவானது 100க்கு 45 வீதம் குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி நடவடிக்கைகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம்  17,493 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 13,794 உந்துருளிகளும் 206 முச்சக்கர வண்டிகளும் பதியப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.