நாம் தனிமையில் இல்லை...' (We are Not Alone!)

நாம் தனிமையில் இல்லை...' (We are Not Alone!)

பகல் வானின் சூரியனும், இரவு வானின் நிலாவும், விண்மீண்களும், வால் நட்சத்திரங்களும், கிரகங்களும் என எமது கண்ணுக்குத் தெரியும் அம்சங்கள் மட்டுமன்றி சூப்பர் நோவாக்கள், கருந்துளைகள், குவாசர்கள், நியூட்ரோன் நட்சத்திரங்கள் போன்ற தொலைக் காட்டிகளால் பார்க்கக் கூடிய அல்லது ஊகிக்கக் கூடிய (உதாரணம் - கருந்துளைகள்) எண்ணற்ற விசித்திரங்கள் அடங்கியது இந்தப் பிரபஞ்சம்..

இந்தப் பிரபஞ்சத்தில் எமக்குத் தெரிந்து இந்தப் பூமியில் மட்டும் தான் பகுத்தறிவும், சிந்திக்கவும் திறன் படைத்த மனிதர்களாகிய நாமும் இன்னும் கோடானு கோடி தாவரங்களும், விலங்குகளும் வாழ்கின்றோம் என்பதைத் தாண்டி, இப்பிரபஞ்சத்தின் வேறு இடங்களில் முக்கியமாக சூரிய குடும்பத்தினதும், எமது தொலைக் காட்டிகளால் இதுவரை அவதானிக்கப் பட்டுள்ள கிரகங்களிலும் இது போன்ற உயிர்கள் வாழ்வதற்கான உறுதியான ஆதாரங்கள் எம்மிடம் இல்லை என்று தான் நம்மில் பெரும்பாலானவர்கள் கருதுவோம்.

ஆனால் அது தவறு. நிச்சயம் எமது எமது பிரபஞ்சம் எண்ணற்ற உயிரினப் பரிமாணங்களுக்கான வளங்களைக் கொண்டிருக்கும் என்றும் இதனால் பூமி என்ற கிரகம் தவிர்ந்து இன்னும் எண்ணற்ற அண்டங்களில் காணப்படும் எண்ணற்ற விண்மீண் தொகுதிகளில் குறிப்பிட்ட விண்மீன்களைச் சுற்றி வரும் கிரகங்களில் எம்மைப் போன்ற உயிரினங்களும், ஏன் மனிதனைப் போன்ற அறிவுக்கூர்மை (Intelligence) மிக்க உயிரினங்களும் வாழும் சாத்தியம் நிச்சயம் உள்ளது. இவற்றைக் கண்டறியவும், அறிவார்ந்த உயிரினங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தவும் தேவையான தொழிநுட்பம் இன்றைய மனிதனிடத்தில் வளர்ந்து வருகின்றது என்றும் கூறுகின்றது இந்தப் புதிய தொடர்..

4தமிழ்மீடியாவின் அறிவியல் கட்டுரைகள் பகுதியில் வாராந்தம் வெளிவரவுள்ள இந்தத் தொடர் கடந்த வருடம் நேஷனல் ஜியோகிராபிக் (National Geographic) இதழின் மார்ச் மாதப் பதிப்பில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கத்துடன், விக்கிபீடியா, Nasa.gov போன்ற அறிவியல் தளங்களில் இருந்து திரட்டப் பட்ட தகவல்கள் மற்றும் கூகிளின் புகைப் படங்களுடனும் உங்களை பார்வைக்கு வரவுள்ளது.

இத்தொடர் உங்களின் விண்வெளி தொடர்பான அறிவியல் வேட்கைக்கு விருந்தளிப்பதுடன், வானியல் கல்வியில் வேற்றுக்கிரக உயிரினங்கள் தொடர்பான தேடுதல் எவ்வாறு முதல் நிலையில் உள்ளது என்பது குறித்த கேள்விக்கான பதிலையும் உங்களுக்கு அளிக்கும் என்ற நம்பிக்கையுடன்..