ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் செப்டம்பர் 22 ஆம் தேதி புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. இந்த அறிமுக நிகழ்வு ஆன்லைனில் நடைபெற இருப்பதாக ஹெச்எம்டி குளோபல் தெரிவித்து உள்ளது. அந்த வகையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் யூடியூப் தளத்தில் நேரலை செய்யப்பட இருக்கிறது.
இந்த நிகழ்வில் நோக்கியா 8.3 5ஜி மாடலின் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மார்ச் மாதத்தில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.
இத்துடன் புதிய நோக்கியா 7.3 ஸ்மார்ட்போன் 'நோ டைம் டு டை' ஹாலிவுட் திரைப்படத்தில் காணப்பட்டது. இந்த மாடலும் இதே நிகழ்வில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. நோக்கியா 7.3 பற்றிய விவரங்கள் இதுவரை ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது.
இவைதவிர நோக்கியா 2.4 மற்றும் நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களின் அறிமுக நிகழ்வு இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு துவங்குகிறது.