கிளிநொச்சியில் கோர விபத்தில் சிக்கி யாழ் குடும்பஸ்தர் பலி: இருவர் வைத்தியசாலையில்...!

கிளிநொச்சியில் கோர விபத்தில் சிக்கி யாழ் குடும்பஸ்தர் பலி: இருவர் வைத்தியசாலையில்...!

கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஏ-35 பரந்தன் - முல்லை வீதியில் முதலாம் மைல் பகுதியில் நேற்று (24-01-2026) இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கருப்பையா ராஜகுமாரன் என்பவரே விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பரந்தன் பகுதியிலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த பாரவூர்தி விசுவமடு பகுதியிலிருந்து வருகை தந்த முச்சக்கர வண்டியுடன் மோதுண்டு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியில் கோர விபத்தில் சிக்கி யாழ் குடும்பஸ்தர் பலி: இருவர் வைத்தியசாலையில்...! | Kilinochchi Accident Family Man Dies On A 35

இந்த நிலையில், விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான இருவரும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.