டிக்டாக் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட புது தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
டிக்டாக் அமெரிக்க உரிமத்தை பெறுவதில் ஆரக்கிள் நிறுவனம் முன்னேற்றம் கண்டுள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக டிக்டாக் உள்லிட்ட சீன செயலிகள் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தங்களை உளவு பார்ப்பதாகவும் கூறி பைட்-டேன்ஸ் நிறுவனம் தங்கள் அமெரிக்க செயல்பாடுகளை 90 நாட்களுக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என டிரம்ப் காலக்கெடு விதித்து இருந்தார்.
இரு நிறுவனங்கள் இடைய ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல் கிடைத்து இருக்கிறது. விரைவில் இதுபற்றிய முடிவு எட்டப்படும் என டிரம்ப் தெரிவித்தார். ஒப்பந்தத்திற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் டிக்டாக்கின் நம்பத்தகுந்த கூட்டு நிறுவனமாக ஆரக்கிள் மாறும்.
இதுபற்றிய ஒப்ந்த விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், டிக்டாக்கின் சர்வதேச வியாபார பிரிவு அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது. மேலும் இதில் ஆரக்கிள் நிறுவனம் மட்டுமின்றி பல்வேறு அமெரிக்க முதலீட்டாளர்களும் முதலீடு செய்வார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.