செப்டம்பரில் சாம்சங் நிகழ்வு - எஸ்20 புது எடிஷன் வெளியாகும் என தகவல்

செப்டம்பரில் சாம்சங் நிகழ்வு - எஸ்20 புது எடிஷன் வெளியாகும் என தகவல்

சாம்சங் நிறுவனம் ‘Galaxy Unpacked for Every Fan’ நிகழ்வினை செப்டம்பர் 23 ஆம் தேதி நடத்துகிறது. இந்த விழாவில் கேலக்ஸி எஸ்20 ஃபேன் எடிஷன் மாடல் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. 

முன்னதாக சாம்சங் கேலக்ஸி எஸ்20 ஃபேன் எடிஷன் பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. அந்த வரிசையில், புதிய ஸ்மார்ட்போன் இவ்விழாவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. 

 கேலக்ஸி எஸ்20 ஃபேன் எடிஷன்

 

சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எஸ்20 ஃபேன் எடிஷன் மாடலில் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஐபி68 தர சான்று, குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 6 ஜிபி ரேம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றார் போல் இந்த மாடல் விலை சற்றே குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

நிறங்களை பொருத்தவரை புதிய கேலக்ஸி எஸ்20 ஃபேன் எடிஷன் மாடல் கிரீன், ஆரஞ்சு, ரெட் மற்றும் வைட் நிறங்களில் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. இதே நிறங்கள் அனைத்து சந்தையிலும் விற்பனைக்கு வருமா அல்லது வேறுபடுமா என்பது தற்சமயம் கேள்விக்குறியாக இருக்கிறது.