பிரபல இயக்குநர் இறந்துவிட்டதாக பரவிய செய்தி - இயக்குநர் செம Fun பதில்

பிரபல இயக்குநர் இறந்துவிட்டதாக பரவிய செய்தி - இயக்குநர் செம Fun பதில்

பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. தமிழில் 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாகவும் மிரட்டினார். மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு விஷயங்கள் கருத்து தெரிவித்து வருகிறார்.

Popular director fun reply to his death news, Goes Viral | தான் இறந்துவிட்டதாக பரவிய செய்திக்கு பிரபல இயக்குநர் செம் ஜாலி பதில்

இந்நிலையில் அவர் இறந்து விட்டதாக இரங்கல் தெரிவித்து செய்தி ஒன்று வெளியாகியது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த செய்தியை பகிர்ந்தார்.

அந்த பதிவில், ''நேற்று நான் எமனை பார்த்தேன். இன்று மீண்டும் அவர் என்னை வீட்டில் விட்டார். நீ நிறைய படம் இயக்க வேண்டும். நீ படம் இயக்காவிட்டால் மற்றவர்களால் அதனை தடை செய்ய முடியாது. அவர்கள் வாழ்க்கை எப்படி முழுமையடையும் என்றார். அதன் காரணமாக நான் மீண்டும் வந்தேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவு செம வைரலாகி வருகிறது.