பேருந்து கட்டண திருத்தம் குறித்து வெளியான புதிய தகவல்
எரிபொருள் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டதை அடுத்து பேருந்து கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை தனியார் பேருந்துகள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது, நடைமுறையில் உள்ள கட்டணங்களுக்கமைய பேருந்து கட்டணங்கள் அறவிடப்படும் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, முச்சக்கர வண்டி கட்டணங்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படமாட்டாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.