மக்களே இன்று முதல் கட்டாயம் பணம்...! நாட்டில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்
வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு இன்று முதல் கட்டணம் அறவிடப்படவுள்ளது.
வியாபார நிலையங்களில் வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு கட்டணம் விதிக்க வேண்டும் என கடந்த அக்டோபர் முதலாம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி இலக்கம் 2456/41 ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இதுவரைக் காலமும் பொருட்களை கொண்டு செல்வதற்கு இலவசமாக வழங்கப்பட்ட ஷொப்பின் பைகள் உள்ளிட்ட பொலித்தீன் பைகளுக்கு இன்று முதல் கட்டாயம் பணம் அறவிடப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
இந்நிலையில் நடுத்தர அளவிலான கைப்பிடி பைக்கு 3 ரூபாவாகவும் பெரிய கைப்பிடி பைக்கு 5 ரூபாவாகவும் ஆகவும் கட்டணம் அறவிடப்படவுள்ளது.
இதனை கீல்ஸ், காகில்ஸ் புட் சிட்டி, லாப்ஸ் சூப்பர், ஸ்பார் மற்றும் குளோமார்க் உள்ளிட்ட வியாபார நிலையங்கள் இணைந்து அறிவித்துள்ளன.
இதன்மூலம், பொருட்களை கொள்வனவு செய்பவர்கள் பைகளை தம்வசம் எடுத்துச் செல்ல ஊக்குவிக்கின்றனர்.
பொலித்தீன் பை பாவனைகளை மக்கள் மத்தியில் குறைப்பதே இதன் நோக்கமாகும். இதேவேளை குறித்த பைகளுக்கென அறவிடப்படவுள்ள தொகையை வர்த்தக நிலையங்களில் காட்சிப்படுத்த வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.