இலங்கைக்கு வந்து குவிந்த இலட்சக்கணக்கிலான சுற்றுலாப்பயணிகள்

இலங்கைக்கு வந்து குவிந்த இலட்சக்கணக்கிலான சுற்றுலாப்பயணிகள்

நாட்டிற்கு இதுவரை 18 இலட்சத்து 78 ஆயிரத்து 557 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதி வரை இந்த வருகை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை நான்கு இலட்சத்து 20 ஆயிரத்து 33 ஆகும்.

இலங்கைக்கு வந்து குவிந்த இலட்சக்கணக்கிலான சுற்றுலாப்பயணிகள் | Sri Lanka Welcomes 1 87 Million Tourists In 2025

அத்தோடு, ஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 21 சுற்றுலாப் பயணிகளும் மற்றும் ரஷ்யாவில் இருந்து ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 594 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

ஜேர்மனியில் இருந்து ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 938 சுற்றுலாப் பயணிகளும் மற்றும் சீனாவில் இருந்து ஒரு இலட்சத்து 11, ஆயிரத்து 998 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

இலங்கைக்கு வந்து குவிந்த இலட்சக்கணக்கிலான சுற்றுலாப்பயணிகள் | Sri Lanka Welcomes 1 87 Million Tourists In 2025

பிரான்ஸில் இருந்து 93 ஆயிரத்து 104 சுற்றுலாப் பயணிகளும் மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து 84 ஆயிரத்து 606 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

நெதர்லாந்தில் இருந்து 55 ஆயிரத்து 444 சுற்றுலாப் பயணிகளும் மற்றும் அமெரிக்காவில் இருந்து 51 ஆயிரத்து 862 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.