ஐபோன் வழியில் வாட்ச்களை அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டம்

ஐபோன் வழியில் வாட்ச்களை அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டம்

ஆப்பிள் நிறுவனத்தின் செப்டம்பர் மாத நிகழ்வில் முந்தைய ஆண்டுகளை போன்று இல்லாமல் ஐபோன் மாடல்கள் அறிமுமகம் ஆகாது. ஐபோன்களுக்கு மாற்றாக ஆப்பிள் நிறுவனம் புதிய வாட்ச் மற்றும் ஐபேட் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

 

ஆப்பிள் வாட்ச் சீரிசுடன் புதிய ஐபேட் ஏர் மாடலும் அறிமுகமாக இருக்கிறது. இதில் மெல்லிய பெசல்கள் மற்றும் அதிக சக்திவாய்ந்த பிராசஸர் வழங்கப்படலம். இதேபோன்று வாட்ச் மாடல்களுக்கும் அதிக மாற்றங்கள் செய்யப்படலாம் என தெரிகிறது. இம்முறை ஆப்பிள் நிறுவனம் இரண்டு வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

 ஆப்பிள் வாட்ச் 5

 

ஐபோன் மாடல்களை போன்றே, ஆப்பிள் வாட்ச் இம்முறை ப்ரோ வேரியண்ட் கொண்டிருக்கும் என தெரிகிறது. ப்ரோ வேரியண்ட் என்பதால், இதன் அம்சங்கள் மற்றும் விலை கூடுதலாக இருக்கும். ப்ரோ மாடலில் 44எம்எம் டையல் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

 

இது வழக்கமான ஜிபிஎஸ் மற்றும் செல்லுலார் என இரு மாடல்களில் கிடைக்கும் என்றும் இரண்டிலும் அதிநவீன வாட்ச்ஒஎஸ் வழங்கப்பட இருக்கிறது. புதிய வாட்ச் ஸ்டான்டர்டு வேரியண்ட்டில் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, இசிஜி அம்சங்கள் வழங்கப்படாது. இந்த அம்சங்கள் ப்ரோ வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்படுகிறது. 

புதிய ஆப்பிள் வாட்ச் ஸ்டான்டர்டு மாடலில் எம்9 சிப்செட் வழங்கப்பட இருக்கிறது. புதிய ஆப்பிள் வாட்ச் பற்றி அந்நிறுவனம் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.